தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய இளம் வேட்பாளர் எஸ்.எஸ்.அமல் மட்டக்களப்பு மறை மாநில ஆயர் பேர்அருட்திரு கலாநிதி யோசப் பொன்னையா ஆண்டகையை இன்று காலை 9 மணி அளவில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார்.
இதன்போது தன்னை அறிமுகப்படுத்திய வேட்பாளர் தன்னால் இளைஞர்களுக்கான பங்களிப்பு, மதங்களுக்கிடையிலான உறவு மற்றும் மாவட்ட வளர்ச்சியின் கல்வியின் நிலை என பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.
அதுமட்டுமன்றி தான் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அபிவிருத்திக்காக எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றேன் என்பதனையும் தெளிவு படுத்தினார். இதன்போது ஆயர் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இளம் வேட்பாளரை களமிறக்கியது மகிழ்ச்சி தருவதாகவும் தான் அதனை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக