வியாழன், 16 ஜூலை, 2015

மட்டு.போதனா வைத்தியசாலை அம்பியுலன்ஸ் குருணாகலில் விபத்து –ஒருவர் பலி -மூவர் படுகாயம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நோயாளியை ஏற்றிச்சென்ற அம்பியுலன்ஸ் வண்டி குருணாகல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.


இன்று அதிகாலை குருணாகல் நகரில் இருந்து 12 கிலோமீற்றர் தூரத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கொழும்பில் இருந்துவந்த லொறியும் அம்பியுலன்ஸ் வண்டியும் நேருக்கு நேர் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தன.

இந்த விபத்தின்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஊழியரான கே.செனவிரத்ன(35)வயது என்பவரே உயிரிழந்துள்ளதுடன் தாதிய உத்தியோகத்தர் கே.சகாயராஜா மற்றும் அம்பியுலன்ஸ் சாரதி உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர்.

நோயாளியை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு ஏற்றிச்சென்ற அம்பியுலன்ஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகவும் எனினும் நோயாளிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் விசாரணையை குருணாகல் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624982

Translate