மட்டக்களப்பு - கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஏற்பாட்டில் “ஒரு துளி உதிரம் கொடுத்து ஒரு உயிர் காப்போம் “ எனும் தொனிப்பொருளில் கடந்த (19) ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது வருடமாக நடத்தப்பட்ட மாபெரும் இரத்ததான முகாம் மட்டக்களப்பு கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய பங்குப் பணிமனையில் நடைபெற்றது.
புனித இஞ்ஞாசியார் ஆலய கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வினை இயேசு சபை துறவி அருட்தந்தை லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்திசெய்யும் வகையில் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவின் வைத்தியர் க.விவேக் தலைமையிலான தாதியர்கள் கலந்துகொண்ட இவ் இரத்ததான நிகழ்வானது காலை 9.00 மணியளில் ஆரம்பிக்கப்பட்டு நண்பகல் 12.00 மணிவரை இடம்பெற்றதுடன், இதன்போது 35 இரத்த கொடையாளர்களிடம் இரத்த மாதிரிகள் பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக