செவ்வாய், 14 ஜூலை, 2015

கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவில் அதிருப்தி! சித்தாண்டியில் சுயேட்சைக் குழு போட்டி!

மட்டக்களப்பு மாவட்ட கல்குடா தேர்தல் தொகுதி சித்தாண்டி பிரதேசத்திற்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்ப்பாளர் தெரிவு முறைகேடான முறையில் நடைபெற்றத்தையிட்டு கூட்டமைப்பின் மீது அதிருப்தி அடைந்த சித்தாண்டி இளைஞனர் அணியினர் சுயேட்சைக் குழுவில் இம்முறை தேர்தலில் களமிறங்குகியுள்ளதாக அதன் தலைவர் கனகசூரியம் கனகரெட்ணம் தெரிவித்தார்


சித்தாண்டியில் ஒழுங்குசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மேலும் இங்கு கருத்துதெரிவிக்கையில்:- பொது தேர்தல் நடைபெறுவதற்காக அறிவிப்புக்கள் அரசாங்கத்தினால் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே தமிழ் அரசு கட்சியில் கல்குடா தொகுதி சித்தாண்டி பிரதேசத்தில் உயர் கல்வித்தகைமை உடையவராகவும் மற்றும் மாவட்டத்தின் அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வேட்ப்பாளரை தெரிவு செய்யவேண்டுமென சித்தாண்டி பொதுமக்கள் மற்றும்  புத்தி ஜீவிகள் என பலரும் ஏற்றுக்கொண்டமைக்கு ஆதரவாக குறித்த கோரிக்கையை தமிழரசு கட்சியின் செயலாளர் அவர்களுக்கு தெரியப்படுத்தி சம்மத்தையும் பெற்றுக்கொண்டோம்.

தேர்தல் அறிவிக்கப்பட்டதும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தேர்தலில் களமிறங்க இருக்கும் வேட்பாளர்கள் தெரிவு நடைபெற்றது.

கல்குடா தொகுதிக்கு இரண்டு வேட்பாளர்கள் இம்முறை களமிறங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களும் சித்தாண்டி பிரதேச மக்கள் கேட்டுக்கொண்டமைக்கு இனங்க புதுமுக வேட்பாளராக சித்தாண்டியில் இருந்து தெரிவு செய்வதற்காக அனுப்பப்பட்ட வேட்ப்பாளர் பெயர்களும் சிபார்சு செய்யப்பட்டு தெரிவு நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

இறுதி வேட்பாளர் பட்டியில் தெரிவுகள் இடம்பெற்றுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் துரைராஜாசிங்கம் தெரிவித்தபோதும் சித்தாண்டி பிரதேசத்தில் இருந்து வேட்பாளராக தெரிவு குழுவுக்கு அனுப்பப்பட்டு அவர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சித்தாண்டி பிரதேசத்தில் இருந்து தெரிவான வேட்ப்பாளர் பெயர் அகற்றப்பட்டு சௌந்தராஜான் அவர்களின் பெயரை சிபார்சு செய்துள்ளமையானது எங்களுக்கு மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் இவ்வாறான கீழ்தரமான செயற்பாட்டை கண்டித்து இன்று நாங்கள் இளைஞர்களாக 8 பேர் சேர்ந்து சுயேட்சைக்குழுவில் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளோம். அதனடிப்படையில் 20வது சுயேட்சைக் குழுவாக பதிவு செய்யப்பட்டு வண்டில் சின்னத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நடைபெறவிருக்கும் பொது தேர்தலில் சித்தாண்டியில் இருந்து சுயேட்சைக்குழு சார்பாக தலைவர் நல்லதம்பி கனகசூரியம்இ முத்துப்பிள்ளை முரளிதரன்இ உதயகுமார் உதயவேந்தன்இ பேரின்பம் கமலரூபன்இ துரைராசா சுபாஸ்கரன்இ மயில்வாகனம் ரமேஸ்காந்இ பூபாலப்பிள்ளை தாவநிதன்இ சண்முகநாதன் பத்மகாந்தன் ஆகிய எட்டு வேட்பாளர்களும் போட்டியிடுகின்றோமெனவும் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துதெரிவிக்கையில் நாங்கள் இன்று சுயேட்சைக் வேட்பாளராக களமிறங்கியதன் முக்கிய நோக்கம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்கள் பிரதேசத்திற்கு நாங்கள் தெரிவு செய்த வேட்பாளரை தெரிவு செய்வதில் காட்டிய தில்லுமுல்லு காரணமே தவிர சித்தாண்டி மக்களும் மற்றும் அண்டிய எங்களது பிரதேச மக்களும் தமிழ் அரசு கட்சிக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கின்றோம்.
எங்களது பிரதேச வேட்பாளர் ஒருவரை நியமிக்கதான் காரணமாக எங்களது மக்களின் பலத்தை இந்த கூட்டமைப்பிலுள்ள மோசமான உறுப்பினர்களுக்குத் காட்டி எதிர்காலத்தில் இவ்வாறான எதேர்ச்சியான முடிவுகளை அவர் அவர் அதிகாரத்துக்கு ஏற்றால்போல் கையில் எடுக்காமல் மக்கள் மற்றும் கட்சி சார்ந்து மேற்கொள்ளவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா தொகுதிக்குப்பட்ட எங்களது சித்தாண்டி பிரதேசமானது சுமார் பதினொராயிரம் வேட்பாளர்களை கொண்டிருக்கின்றது. கல்குடா தொகுதியிலே இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொள்ள வேண்டிய இடத்தில் சித்தாண்டிக்கு வேட்பாளரை பெற்றுத்தருவதாக வாக்குறுதி தெரிவித்தும் ஒரு வேட்பாளர் அதுவும் நாடாளுமன்றம் ஆண்ட ஒரு உறுப்பினரை தெரிவுசெய்துள்ளார்கள். இதுதானா கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவு.

இன்றைய வேட்பாளர் தெரிவில் அதிருப்தி அடைந்துபோயுள்ள சித்தாண்டி பொதுமக்கள் ஆகிய நாங்கள் தமிழ் அரசு கட்சிக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன் எதிர் காலத்தில் சித்தாண்டிக்கு தேசியல் பட்டியல் என்ற விடயத்தில் கவனம் செலுத்துங்கள்இ அல்லது மாகாண சபைஇ பிரதேச சபை போன்ற விடயங்களில் கவனம்செலுத்தி எங்கள் பிரதேசத்துக்கு ஒரு பிரதிநித்துவம் பெற்றுத்தரவேண்டும். அதனை நாங்கள வரவேற்கின்றோமென அவர் குறிப்பிட்டார்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624979

Translate