இலங்கையின் மிக முக்கிய அழிவுப்பாதையினை ஏற்படுத்துவதாக போதைப்பொருள் பாவனை இருந்துவருவதாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணருமான டாக்டர் கே.அருளானந்தம் தெரிவித்தார்.
தேசிய போதையொழிப்பு மாதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையின் விளைவுகள் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பாடசாலைகளில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
கறுவப்பங்கNணி விபுலானந்தா வித்தியாலயத்தில் போதையொழிப்பு மாதத்தினை முன்னிட்டு இந்த விழிப்புணர்வு நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி சி.எஸ்.மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணருமான டாக்டர் கே.அருளானந்தம்,மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் எல்.சுல்பிகான் மற்றும் பொலிஸ் அதிகாரிகள்,மாணவர்கள்,ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது போதைபாவனையினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் டாக்டர் கே.அருளானந்தம் விழிப்புணர்வு கருத்தரங்கினை நடாத்தினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளொன்றுக்கு 42 இலட்சம்ரூபா மதுபாவனைக்காக செலவிடப்படுகின்றது.இது மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதாரத்தினை கடுமையாக பாதிக்கச்செய்கின்றது.
வங்கிகளில் இன்று அதிகளவில் பணத்தினை வைப்புச்செய்பவர்களாக சிகரட்,மதுபான சாலைகளின் தரகர்களே உள்ளனர்.சாதாரண மக்களிடம் பணம் இல்லை என இங்கு கருத்து தெரிவித்த டாக்டர் கே.அருளானந்தம் தெரிவித்தார்.

0 facebook-blogger:
கருத்துரையிடுக