வெள்ளி, 31 ஜூலை, 2015

வாக்காளர்களை அறிவூட்டும் நிகழ்வு செயலமர்வு

நல்லாட்சிக்கான அரசைத் தெரிவு செய்வதற்கானதொரு அரிய சந்தர்ப்பம் மீண்டும் பொதுமக்களின் கைகளுக்கு வந்துள்ளது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு முன்னாள் இணைப்பாளர். ஆர். மனோகரன் தெரிவித்தார்.


எதிர்வரும் பொதுத் தேர்தலில் நல்லாட்சிக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் நோக்கில் வாக்காளரைத் தெளிவூட்டும்; வேலைத்திட்டத்தை வியாழக்கிழமை மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் ஆரம்பித்து வைத்து மனோகரன் இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய சமாதானப் பேரவை (National Peace Council) சிவில் சமூகத்துடன் இணைந்து வாக்காளர்களுக்கு அறிவூட்டும் இந்த நிகழ்ச்சித் திட்டத்தை நடத்தி வருகின்றது.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மனித உரிமைகள் செயற்பாட்டாளரான மனோகரன் கூறியதாவது, நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல் இலங்கைக்கு மிக முக்கியமானதொன்றாகும். எமது நாட்டின் எதிர்காலப் பாதையை நிர்ணயித்துக் கொள்வதற்கான சந்தர்ப்பமாகவும் இது அமைந்துள்ளது.

சகல இன மத சமூகங்களும் ஒன்று கூடி சிறந்ததொரு நல்லாட்சியைத் தெரிவு செய்வதறகான அரியதொரு சந்தர்ப்பமாக எதிர்வருகின்ற பொதுத் தேர்தலை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தெரிவு செய்கின்ற அரசும், அந்த அரசில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொருளாதார நன்மைகளை சமூகத்தின் சகல தரப்பாருக்கும் கிடைக்கக் கூடிய வழிவகைகளைச் செய்யக் கூடியதாக குறிப்பாக சிறுபான்மையினரை ஒதுக்காத பக்குவ மனம் கொண்டதாக இருக்க வேண்டும்.

அதிகாரப் பகிர்வு எல்லா இன சமூகமக்களுக்கும் கிடைக்க வேண்டும்.
கடந்த மூன்று தசாப்த கால சம்பவங்களின் உண்மைத் தன்மையை வெளிப்படையாக மக்களுக்குத் தெளிவு படுத்தி நல்லிணக்கத்தைக் காண வேண்டும்
இத்தகைய பொறுப்புக்கள் இன்று பொது மக்களிடம் விடப்பட்டுள்ளன.  எனவே இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி வாக்காளர்களை அறிவூட்ட வேண்டும்.”என்றார்.

சிவில் சமூகப் பிரதிநிதிகள், சமூக மட்ட நிறுவனங்களின் அலுவலர்கள், சமய நிறுவனங்களைச் சேர்நத்தோர் ஊடகவியலாளர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

இந்நிகழ்வில் இலங்கை சமாதானப் பேரவையின் திட்ட இணைப்பாளர் சமன் செனவிரட்ன, திட்ட அதிகாரி சாந்த பத்திரன, இலங்கை அபிவிருத்திக்கான உதவு ஊக்க மையத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஏ. சொர்ணலிங்கம் ஆகியோரும் மஸியா ஹில்மி உட்பட இன்னும் பல வளவாளர்களும் கலந்து கொண்டு அறிவூட்டலை விழிப்புணர்வுக் கருத்தரங்கை நடத்தினர்.








Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624983

Translate