பாடசாலை அதிபரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாகவும், சக வேட்பாளர் சீ. யோகேஸ்வரன் அவர்களது ஆதரவாளர்களுக்கும் கோவிந்தன் கருணாகரத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் வெளியான தகவல்கள் குறித்து கோவிந்தன் கருணாகரம் (ஜனா) விடம் தேர்தல் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் வினவியுள்ளர்.
இவ்விடயம் குறித்து கேட்டபோது கருத்துத் தெரிவித்த கோவிந்தன் கருணாகரம்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராகக் களமிறங்கியுள்ள என்னைப்பற்றி பல அவதூறான பிரசாரங்கள் இணையத்தளங்களில் மேற்கொள்ளப்படுவதுபற்றி தேர்தல் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் என்னோடு தொடர்புகொண்டு வினவியுள்ளனர்.
நான் ஒரு பாடசாலை அதிபரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாகவும், எனது சக வேட்பாளர் சீ. யோகேஸ்வரன் அவர்களது ஆதரவாளர்களுக்கும் எனது ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் இச்செய்திகள் தொடர்பான உண்மை நிலைபற்றி என்னிடம் வினவப்பட்டது.
தேர்தல் தொடர்பான வேலைப்பளுக்களுக்கு மத்தியில் இத்தகைய கீழ்தரமான செய்திகளுக்கு பதிலளிப்பது எனது நேரத்தை வீண்விரையம் செய்யும் என்பதனால் இது தொடர்பாக எத்தகைய கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
ஆனால் இவர்களது இத்தகைய அவதூறுகள் தொடர்ந்தும் தங்களது இணையத்தளங்கள் மூலம் மேற்கொள்ளும் போக்கு தொடர்கதையாகும் நிலை எனக்கு தென்படுவதால் இத்தகைய செய்திகளுக்கு எனது மறுப்பினை பதிவு செய்கின்றேன்.
என் தொடர்பாக வெளியிடப்பட்ட இத்தகைய சம்பவங்கள் யாவும் உண்மைக்கு புறம்பானவை எனவும் இவ்விணையத்தளங்களின் கற்பனை எனவும் கூறுவதுடன் எதிர்காலத்திலும் இத்தகைய இணையத்தளங்கள் பதிவு செய்யும் எந்த செய்திகளையும் நம்பவேண்டாம் என்று தமிழ்த் தேசியம் விரும்பும் என் உறவுகளைக் கேட்டுக்கொள்கின்றேன்.

0 facebook-blogger:
கருத்துரையிடுக