வியாழன், 3 செப்டம்பர், 2015

அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழும் விளாவட்டவான் மீனவ வீதி மக்கள்

(எரிக்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திற்குட்பட்ட விளாவட்டவான் கிராமத்தில் மீனவ வீதியில் வசிக்கும் மக்களில் ஒரு பகுதியினர் வாழ்வதற்கு வீட்டு வசதி இல்லாமலும், குளிப்பதற்கு நீர் வசதி இல்லாமலும் பொதுக் கிணறுகளை வழக்கமாகப் பாவித்து வருகின்றனர்.


மீள்குடியேற்றப்பகுதியான இப்பகுதியில் இதுவரையில் தற்காலிக வீடுகளிலேயே மக்கள் வசித்துவருவதுடன் மலசல வசதிகூட ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை.

நல்லாட்சி நடாத்திவரும் புதிய அரசாங்கம் வீடு இல்லாத அனைவருக்கும் வீட்டினை வழங்கி வருகின்ற நிலையில் இப்பகுதியையும் நோக்கவேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

விளாவட்டவான் மீனவர் வீதியில் வசிக்கும் இம்மக்களின் பிரச்சினைகளை அரசியல்வாதிகள் தீர்த்து வைக்க நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.







Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624992

Translate