வெள்ளி, 31 ஜூலை, 2015
தீர்வுத்திட்டம் எதனையும் பெரும்பான்மைக்கட்சிகள் கொண்டிருக்கவில்லை –ஜனா
இனப்பிரச்சினை தொடர்பாக எத்தகைய தெளிவான தீர்வுத்திட்டங்கள் எதையுமே பெரும்பான்மைக்கட்சிகள் தமது தேர்தல் வஞ்ஞாபனத்தில் தெளிவாக முன்வைக்கவில்லை. இது தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துக் கூறவில்லை என்பதை விட சிங்கள மக்கள் மத்தியில் கூறவிரும்பவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
வியாழன், 30 ஜூலை, 2015
மட்டு - முறக்கொட்டான்சேனை தேவாபுரம் நாககன்னி ஆலயத்தில் நடைபெற்ற பாற்குடபவனி
(கிரான் விஜிகரன்) முறக்கொட்டான்சேனை தேவாபுரம் ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்வசத்தினை முன்னிட்டு நான்காம் நாளாகிய இன்று (30) வியாழக்கிழமை பாற்குட பவனி நிகழ்வு நடைபெற்றது.
முறக்கொட்டான்சேனை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை மற்றும் ஆராதனையை தொடர்ந்து பக்தர்கள் புடைசூழ பாற்குட பவனியானது ஊர்வலமாக முறக்கொட்டான்சேனை சேர்மன் வீதியூடாக அம்மனின் ஆலயத்திற்கு வருகைதந்ததும் ஆலயத்தின் நித்திய பூசகர் கந்தன் இளையதம்பி அவர்களினால் விசேட பூசைகள் இடம்பெற்று ஸ்ரீ நாககன்னி அம்மனுக்கு பாலினால் அபிசேகம் நடைபெற்றதை தொடர்ந்து மதிய நேர பூசைகள் நடைபெற்றது.
அம்மனின் 21வது வருடாந்த அலங்கார உற்சவ திருச்சடங்கு எதிர்வரும் திங்கள் கிழமை (27) திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
ஆலயத்திற்கு வருகின்ற பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கானது ஐந்து உற்சவங்களை கொண்டது.
புதன், 29 ஜூலை, 2015
கிழக்கு கல்வி அமைச்சுக்கு சொந்தமான வாகனம் தீயினால் சேதம்
கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு சொந்தமான வாகனம் ஒன்று தீயினால் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை 04.30 அளவில் திருகோணமலை - சிவன்கோயிலடியில் உள்ள வாகனம் திருத்தும் நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
தீ அணைப்பு வீரர்கள் சென்று நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று அதிகாலை 04.30 அளவில் திருகோணமலை - சிவன்கோயிலடியில் உள்ள வாகனம் திருத்தும் நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
தீ அணைப்பு வீரர்கள் சென்று நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஐமசுகூ.வில் இணைந்தார் சிவகீதா பிரபாகரன்
மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் மேயரும், பீல் மாஸ்டர் சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான சிவகீதா பிரபாகரன் நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டார்.
கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் முன்னிலையில் இவர் கூட்டமைப்பில் இணைந்தார்.
இவருடன் மட்டக்களப்பு மாநகர சபையின் ஐந்து முன்னாள் உறுப்பினர்களும் கைகோர்த்துள்ளனர்.
கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் முன்னிலையில் இவர் கூட்டமைப்பில் இணைந்தார்.
இவருடன் மட்டக்களப்பு மாநகர சபையின் ஐந்து முன்னாள் உறுப்பினர்களும் கைகோர்த்துள்ளனர்.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கான இலவசக் கல்வி கருத்தரங்கு
(கிரான் விஜிகரன்) கிழக்குப் பல்கலைக்கழக லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் கா.பொ.த உயர்தர பரீட்சையை எதிர்கொள்ளவுள்ள மாணவர்களை தயார் செய்யும் நோக்கோடு பல்கலைக்கழக லயன்ஸ் கழகத்தினால்; கல்வி கருத்தரங்கானது 21, 22ம் தினங்களில் கிழக்குப்பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் வளவாளர்களாக தமிழ் துறை பேராசிரியர் எஸ்.யோகராஜா, இந்த நாகரீகத் துறை தலைவி திருமதி சாந்தி கேசவன், சிரேஸ்ட விரிவுரையாளர் எஸ்.முகுந்தன், விரிவுரையாளர் வாமன் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான துறை சிரேஸ்ட விரிவுரையாளர் யோகராஜா, அளவையியலும் விஞ்ஞானமுறை துறை தலைவர் மு ரவி, சிரேஸ்ட விரிவுரையாளர் சோ ஜெகநாதன், உதவி விரிவுரையாளர் பிரபாகரன் ஆகியோர் தமது பாரிய பங்களிப்ப்pனை வழங்கினர்.
இதன் ஆரம்ப நிகழ்வானது கிழக்குப்பல்கலைக்கழக லயன் தலைவர் மாசிலாமணி அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இன்நிகழ்வின் பிரதம அதிதியாக சர்வதேச லயன் கழக 306 C2 மாவட்டத்தின் ஆளுனர் சபையின் செயலாளர் லயன் Dr. செல்வேந்திரன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக கல்குடா வலக கல்விப்பணிப்பாளர் எஸ்.சிறிஸ்கந்தராஜா, சர்வதேச லயன் கழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய தலைவரும், கிழக்குப்பல்கலைக்கழக தாவரவியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளருமான லயன் கலாநிதி சந்திராகாந்தா மகேந்திரநாதன் லயன் கழக வலைய தலைவர்கள் லயன் ஜெயக்குமார் லயன் ராஜகோபால், மட்டக்களப்பு பெண்கள் லயன்ஸ் கழக அங்கத்தவர்கள் மற்றும் கிழக்குப்பல்கலைக்கழக லயன் அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேற்படி கல்விக்கருத்தரங்கானது தமக்கு மிகவும் பயனள்ளதாகவும் குறிப்பாக தம்மை பரீட்சைக்கு தயார் படுத்துவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்ததாகவும் இக்கருத்தரங்கில் பங்கு கொண்ட மாணவர்கள் தெரிவித்தனர். அத்துடன் இவ்வாறான கருத்தரங்குகளை தொடர்ந்து நடாத்தி தமது வலயத்தின் கல்வி மேன்பாட்டுக்கு உதவுமாறு வலைய கல்விப்பணிப்பாளர் தமது சிறப்பு அதிதி உரையில் தெரிவித்தார்.
செவ்வாய், 28 ஜூலை, 2015
திங்கள், 27 ஜூலை, 2015
குகனேசன் உள்ளிட்ட 8 பேரின் படுகொலையுடன் தொடர்புபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் - தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி
2004.07.2015ம் திகதி கொட்டாவையில் நித்திரைத் தூக்கத்தில் வைத்துபடுகொலைசெய்யப்பட்டதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் குகனேசன் உள்ளிட்ட 08 பேர் படுகொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன்நிறுத்தப்படவேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஞாயிறு, 26 ஜூலை, 2015
மீன் பிடிப்படகின் வெளியிணை இழுவை இயந்திரம் திருட்டு (ஏறாவூர் – சவுக்கடி கடற்கரையில் சம்பவம் )
ஆழ் கடல் மீன்பிடிப் படகின் வெளியி ணை இயந்திரமொன்று திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, ஏறாவூர்- சவுக்கடிக் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் படகொன்றின் வெளியிணை இழு வை இயந்திரம் திருடப்பட்டுள்ளது. வழமைபோன்று புதன்கிழமை ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டு விட்டு படகைக் கரையொதுக்கி நிறுத்தி வைத்திருந்த சமயத்திலேயே இந்தத் திருட்டு இடம்பெற்றுள்ளது. படகின் உரிமையாளரான சவுக்கடி வீதி யைச் சேர்ந்த சதாசிவம் ராமச்சந்திரன் என்பவர் வியாழக்கிழமை பகல் படகைப் பார்த்தபோது படகின் வெளியிணை இழுவை இயந்திரம் அகற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. திருடப்பட்டுள்ள இந்த இயந்திரத்தின் பெறுமதி சுமார் 2 இலட்சத்து 78 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்படுவதாக முறையிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பல குற்றச் செயல்களுக்காக சிறை சென்று திரும்பிய ஒரு நபரே படகின் இயந்திரத்தைத் திருடி விற்றிருப்பது தெரி யவந்திருப்பதாக படகின் உரிமையாளர் முறையிட்டுள்ளார். இது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை யில் ஈடுபட்டுள்ளனர்.
முறக்கொட்டான்சேனை தேவாபுரம் நாககன்னி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பம்!
(கலைச்செல்வன்)
மட்டு நகரின் வடக்கே அமைந்துள்ள முறக்கொட்டான்சேனை ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலயத்தின் 21வது வருடாந்த அலங்கார உற்சவ திருச்சடங்கு எதிர்வரும் திங்கள் கிழமை (27) ஆரம்பமாகவுள்ளது.
அன்னையவளின் ஆலயத்தின் முதல் நாளன்று தெய்வீக சித்தம் கூடிய சுப வேளையில் பிற்பகல் 4.30 மணிக்கு விநாயக பெருமானுக்கு விடேச அபிசேக ஆராதனை இடம்பெற்றதும் திருக்கும்பம் எழுந்தருளச் செய்து 21வது ஆண்டுக்கான வருடாந்த திருச்சடங்குக்குரிய திருக்கதவு திறந்தலுடன் ஆரம்பமாக இருக்கின்றது.
ஆலயத்திற்கு வருகின்ற பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கானது ஐந்து உற்சவங்களை கொண்டது.
நடைபெறயிருக்கும் உற்சவ காலங்களில் ஒவ்வொரு நாட்களும் விசேட பூசை வழிபாடுகள் நடைபெறயிருக்கின்றது.நடைபெறயிருக்கும் ஆலயத்தின் உற்சவத்தின் இறுதி நாளாகிய வெள்ளிக்கிழமை (31) திரௌபதை அம்மன் திருமணம், தீ மிதிப்பு, குளிர்த்தில் பாடுதல் என்பவற்றுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. முறக்கொட்டான்சேனை தேவாபுரம் ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலயத்தின் உற்சவ காலங்களில் அடியார்கள் பக்தி சிரத்தையுடன் ஆலயத்தில் நடைபெறயிருக்கின்ற பூசை நிகழ்வுகளில் கலந்துகொண்டு அன்னையவளின் அருட்கடாச்சம் பெற்றுச்செல்லுமாறு ஆலய இறைபணியிலுள்ள நிருவாகத்தினர் அன்பாக அழைக்கின்றனர்.
அஞ்சல் திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர்களின் விடுமுறை இரத்து
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அஞ்சல் திணைக்கள சேவையாளர்களின் விடுமுறை 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி திங்கட்கிழமை வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் டீ.எல்.பி.ஆர்.அபயரத்ன தெரிவித்தார்.
29ம் திகதி முதல் பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை
வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு பிரத்தியேக வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் போன்றவற்றை நடாத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
இம்மாதம் 29 ம் திகதி நள்ளிரவு முதல் இந்த தடை அமுலாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனுடன் பரீட்சைக்கான மாதிரி வினாக்கள் மற்றும் விடைகள் அச்சிடுதல் மற்றும் அவற்றை விநியோகித்தல் கையேடுகள் அச்சிடுதல் மற்றும் அதனை விநியோகித்தல் போன்றவற்றிற்கும் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பரீட்சை திணைக்களத்தின் இந்த அறிவுறுத்தலை மீறும் மாணவர்கள், ஆசிரியர்கள், அல்லது நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவ்வாறு மீறுவோர் தொடர்பாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பரீட்சைகள் திணைக்கள்திற்கோ தகவல் தருமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இம்மாதம் 29 ம் திகதி நள்ளிரவு முதல் இந்த தடை அமுலாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனுடன் பரீட்சைக்கான மாதிரி வினாக்கள் மற்றும் விடைகள் அச்சிடுதல் மற்றும் அவற்றை விநியோகித்தல் கையேடுகள் அச்சிடுதல் மற்றும் அதனை விநியோகித்தல் போன்றவற்றிற்கும் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பரீட்சை திணைக்களத்தின் இந்த அறிவுறுத்தலை மீறும் மாணவர்கள், ஆசிரியர்கள், அல்லது நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவ்வாறு மீறுவோர் தொடர்பாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பரீட்சைகள் திணைக்கள்திற்கோ தகவல் தருமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது.
சனி, 25 ஜூலை, 2015
சித்தாண்டி சுயேட்சைக்குழு இரா. சம்பந்தனுடன் தீடீர் சந்திப்பு - தமிழரசு கட்சிக்கு ஆதரவு!
(கிரான் விஜிகரன்) மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேசத்தில் மாட்டுவண்டி சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக்குழு தனது ஆதரவை இலங்கை தமிழரசுக்கட்சிக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளது
இன்றைய தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களை திருகோணமலையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்த குறித்த சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் காலத்தின் தேவைகருதி தமிழினத்தின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக தாங்கள் தமிழரசுக் கட்சியை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர்
இது குறித்து கருத்து தெரிவித்த சுயேட்சைக்குழுவின் தலைவர் கனகசூரியம் கனகரெட்ணம் மேலும் கூறுகையில்
எதிர்பாரத நேரத்தில் திடீரென நடைபெறவுள்ள இந்த பாராளுமன்ற தேர்தலானது தமிழ் மக்களை பொறுத்தவரையில் மிகவும் முக்கியம் வாய்ந்தது குறிப்பாக சர்வதேச சமூகம் இந்த தேர்தலை மிகவும் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டு செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.
அந்தவகையில் எமக்குள் ஆயிரம் கருத்து முரண்பாடுகள் உள்ளபோதும் தமிழ் மக்களுக்காகவும் எமது இனத்தின் விடுதலைக்காகவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறவைப்பதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அதிகப்படியான பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பி தமிழ் மக்களின் பேரம்பேசும் சக்தியை அதிகரிக்க வேண்டும்.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து நான்கு பிரதிநிதிகளை இம்முறை பாராளுமன்றத்திற்கு அனுப்பும் நோக்குடன் மாட்டுவண்டி சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட நாங்கள் எமது ஆதரவை தமிழரசுக் கட்சிக்கு வழங்குவதற்கு முடிவு செய்து அந்த செய்தியை உலகிற்கு தெரியப்படுத்தி எம்மைப்போன்று ஏனைய சுயேட்சைக் குழுக்களும் இதுபோன்று தங்களது ஆதரவை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கவேண்டும் என்பதற்காக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா அவர்களை நேரடியாக சந்தித்து எமது ஆதரவை தெரியப்படுத்தியுள்ளோம்.
எனவே எமது கட்சி ஆதரவாளர்கள் தமிழரசுக்கட்சியின் சின்னமான வீட்டுக்கு வாக்களித்து தமிழ் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாக இருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்வதுடன் எம்மைப்போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏனைய சுயேட்சைக் குழுக்களும் தங்களது ஆதரவை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம் எனக் கூறினார்.
தமிழர்களின் வாழ்வில் எழுச்சியை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ் தேசியத்தினை பலப்படுத்தமுடியும் -அமல்
(கிரான் விஜிகரன்) தமிழ் மக்களின் வாழ்வில் எழுச்சியை ஏற்படுத்துவதன் ஊடாக தமிழ் தேசியத்தினை பலப்படுத்தமுடியும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புவதாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் சி.வியாளேந்திரன்(எஸ்.எஸ்.அமல்)தெரிவித்தார்.
வாகரை பால்சேனையில் நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
தமிழர்களின் போராட்டங்கள் கடந்த காலத்தில் பல்வேறு வழிகளில் நடாத்தப்பட்டுவந்துள்ளன.இந்த போராட்டங்களில் பெரும் பங்கை இளைஞர்களே ஆற்றியுள்ளனர்.
இளைஞர்களும் துடிப்பும் உணர்வும் அந்த நிலைக்கு அவர்களை இட்டுச்சென்றன.இன்றைய நிலையில் இளைஞர்கள் அதற்கான களத்தினை ஏற்படுத்த முன்வரவேண்டும்.
நாங்கள் அரசியல் ரீதியான விழிப்படைந்த சமூதாயமாக மாற்றம்பெறவேண்டும்.எமக்குள் உள்ள உணர்வுகளை அரசியல் மூலம் அடைவதற்கான நகர்வுகளை மேற்கொள்ளவேண்டும்.
கடந்த 30வருட கால யுத்தத்தின்போது நாங்கள் உயிரை மட்டும் இழக்கவில்லை.பலவற்றை இழந்துள்ளோம்.அவற்றினை நாங்கள் பெற்றுக்கொள்ளும் வகையிலான வழிமுறைகளை நாங்கள் முன்கொண்டு செல்லவேண்டும்.
வடகிழக்கில் இணைந்த தாயகத்தில் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.அதற்கான அரசியல் ரீதியான,ஜனநாயக ரீதியான நகர்வுகளை நாங்கள் மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறான நகர்வுகளை நாங்கள் மேற்கொள்ளவேண்டுமானால் எமக்கு மத்தியில் கல்வி ரீதியான பொருளாதார ரீதியான கட்டமைப்புகளும் வளர்க்கப்படவேண்டும்.அதற்கு தேவையான பலத்தினை பெற்றுக்கொள்ளவேண்டும்.அதற்கான ஓரு களமாகவே நாங்கள் பாராளுமன்றத்தினை பயன்படுத்தவேண்டும்.
நாங்கள் பேசிக்கொண்டு மட்டும் இருப்பதனால் எதனையும் சாதித்துவிடமுடியாது.அதற்கான நகர்வுகளை ஏற்படுத்தவேண்டும்.சிறந்த திட்டமிடலுடன் அதற்கான பயனத்தினை மேற்கொள்ளும் வகையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து நான் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளேன்.
இன்று எனக்கு பின்னால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளம் சமூகம் அணிதிரண்டுள்ளது.கடந்த காலத்தில் எமது இளைஞர்களின் தேவைகள் இனம்கண்டுகொள்ளப்படவில்லை.அவர்களின் எதிர்காலம் தொடர்பில் அனைவரும் சிந்திக்கவேண்டிய நிலையில் உள்ளோம்.
இன்று அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளோம்.ஆண்ட இனம் இன்று படுகுழி நோக்கிய நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றது.
இதனை நிமிரச்செய்யவேண்டிய பொறுப்பும் கடமையும் அனைவருக்கும் உள்ளது.இதில் இருந்து யாரும் விலகிச்செல்லமுடியாது.எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை வெற்றிபெறச்செய்வதன் மூலம் அந்த நகர்வினை கொண்டுசெல்லவேண்டும்.
அரசியலில் நான் புதியவனாக களமிறங்கினாலும் எமது இனம் சார்ந்த,நோக்கம் சார்ந்த கட்டமைப்புகளை உருவாக்குவதில் என்னிடம் பல அனுபவங்கள் உள்ளது.துறைசார்ந்த அனுபங்களும் என்னிடம் உள்ளது.அதன் மூலம் எனக்கு கிடைக்கும் அரசியல் வாய்ப்பினை சிறந்தமுறையில் பயன்படுத்தி மக்களுக்கு சேவையாற்றமுடியும்.
எமது மக்கள் மத்தியில் புதிய சிந்தனைகள் தோற்றம்பெறவேண்டும்.இன்று தமிழ் மக்களுக்கான தெரிவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது.தமிழ் மக்களுக்கான கட்சியாகவும் உள்ளது.அது தமிழ் மக்களின் தேவையினை இன்று இனம் கண்டு உள்ளது.எதிர்காலத்தில் அதில் இருந்து நழுவிச்செல்லாது என்பதை நான் உறுதிபடக்கூறிக்கொள்கின்றேன்.
நாங்கள் மாற்றுக்கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மூலமோ மாற்று கட்சிகளுக்கு பின்னால் செல்வதன் மூலமோ எதுவித பிரயோசனங்களையும் பெறமுடியாது என்பதை எமக்கு கடந்த கால அனுபவங்கள் பெற்றுத்தந்துள்ளன.நாங்கள் மாற்றுக்கட்சிகளை ஆதரிப்பதன் மூலம் நன்மையடையப்போவது இன்னோர் சமூகம் என்பதை நாங்கள் உணர்ந்து செயற்படவேண்டும்.
மிகமுக்கியமாக எதிர்வரும் பாராளுமன்றத்தில் தமிழ் மக்கள் தமது வாக்குப்பலத்தினை முழுமையாக பயன்படுத்தவேண்டும்.அவ்வாறு பயன்படுத்தாதபட்சத்தில் அடுத்த ஐந்து வருடகாலத்திற்கு நாங்கள் மிக மோசமான பின்னடைவினை எதிர்நோக்கவேண்டிவரும் என்றார்.
சித்தாண்டிக்கு எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் வேட்பாளர் வழங்கப்படும் - சம்பந்தன் வாக்குறுதி
(கிரான் விஜிகரன்) மட்டக்களப்பு சித்தாண்டி மக்களின் வேட்பாளர் தொடர்பான கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அந்தக்கோரிக்கையை எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் நிறைவேற்றுவதற்கு எமது கட்சி வாய்ப்பளிக்குமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களை திருகோணமலையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்த சித்தாண்டி அவர்களது கோரிக்கை தொடர்பாகவும் அதன்பின்னர் ஏற்பட்ட சில முரண்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்;
சித்தாண்டி பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சுயேட்சையாகபோட்டியிடும் வேட்ப்பாளர்கள் இன்றையதினம் என்னைவந்து சந்தித்திருந்தனர். சித்தாண்டி பிரதேசத்திற்கான வேட்ப்பாளர் தெரிவில் இடம்பெற்ற குறைகளை எனக்கு மனம் திறந்து கதைத்திருந்தார்கள் இம்முறை அவர்களுக்கு வேட்பாளர் நியமனம் கிடைக்காததையிட்டுஅவர்கள் தங்களுடைய அதிருப்தியை என்னிடம் தெரிவித்தார்கள்.
சித்தாண்டிகிராமத்தில் பத்தாயிரத்துக்கும் அதிகமாக தமிழ் மக்களின் வாக்குகள் இருக்கின்றது. ஆனபடியால் அவர்களின் கோரிக்கை ஒருநியாயமான கோரிக்கை துரதிஸ்டவசமாக அவர்களுடைய கோரிக்கை இந்த பாராளுமன்ற தேர்தலில் நிறைவேற்றப்படவில்லை.
ஆனால் நிச்சயமாக சித்தாண்டி மக்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து கட்சி இந்தவிடயத்தில் சித்தாண்டி மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது அவசியம். அவ்விதமான மதிப்பை கொடுப்பதற்கு எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் ஒரு சந்தர்ப்பத்தையளிக்கும்.
அவ்விதமான சூழலில் சித்தாண்டி மக்களின் விருப்பத்தை நிறைவேற்றக்கூடியவகையில் கட்சிசெயற்படும் என்ற வாக்குறுதியை நான் அவர்களுக்கு கொடுத்திருக்கின்றேன்.
அவர்களும் நாங்கள் கட்சிக்காக நீண்டகாலஅனுதாபிகள் ஆதரவாளர்கள் என்றஅடிப்படையில் கட்சிக்காக இத்தேர்தலில் போதுமான வெற்றியைப் பெறுதற்குஉழைப்பார்கள் என்றவாக்குறுதியை என்னிடம் தந்திருக்கின்றார்கள் என்று கூறினார்.
வெள்ளி, 24 ஜூலை, 2015
கல்வித் துறையில் இருந்து அரசியல் துறைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளேன் - த.தே.கூட்டமைப்பு வேட்பாளர் ஸ்ரீநேசன்
கல்வித்துறையில் இருந்து அரசியல் துறைக்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளேன் முப்பது வருடம் கல்வித் துறையில் இதயசுத்தியுடன் கறைபடியாத கரங்களுடன் சேவை செய்துள்ளேன் அரசியல் துறையிலும் அவ்வாறு இதயசுத்தியுடனும் சுத்தமான கையுடனும் நேர்மையாக நேர்மையாக அரசியல் செய்து மக்களுக்கு உதவவேண்டும் என நினைக்கின்றேன் என மட்டக்களப்பு மாவட்டத்தில் த.தே.கூட்டமைப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிடும் முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
அலங்காரரூபன் தென்மோடிக் கூத்து கிழக்கு பல்கலைக்கழகத்தில் அரங்கேற்றம்
திறந்த வெளிக்குரிய கூத்தரங்கு மனிதரின் வாழ்தலைத் தன்னகத்தே கொண்ட கலைவடிவமாகும். இது வட்டக் களரியில் உருவாக்கப்பட்டு வடிவம் பெறுவது. ஒவ்வொரு தடவையும் களரி அடிக்கும் போது அந்த வெளியில் சமுதாயம் ஒண்றிணையும். வாழும். நுண்கலைத்துறையில் 2012களின் பின்னர் அதன் இயல்பான வெளியில் நின்றே கூத்து கற்பிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு கற்றல் - கற்பித்தல் மூலம் திறந்த வெளியில் உருவானதே அலங்காரரூபன் தென்மோடிக் கூத்தாகும்.
வியாழன், 23 ஜூலை, 2015
தபால்மூல வாக்களிப்பிற்கான வாக்கட்டைகள் அச்சிடும் பணிகள் நிறைவு
பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான தபால்மூலம் வாக்களிப்பவர்களுக்கான வாக்கட்டைகள் அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
அச்சிடப்பட்ட அனைத்து தபால் மூலம் வாக்காளர்களின் வாக்கட்டைகளும் தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் காமினி பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய உத்தியோகபூர்வ வாக்கட்டைகள் அனைத்தும் விரைவாக அச்சிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை கிடைத்துள்ள விண்ணப்பங்களின் பிரகாரம் தபால் மூலம் வாக்களிப்போர் எண்ணிக்கை 25,000 வரை அதிகரித்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவிக்கின்றார்.
இதனிடையே, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிக்கும் நடவடிக்கை இரு கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் தேற்றாத்தீவு கிராம மக்களின் திருவிழாவும்
இலங்கையின்
மிக பழமை வாய்த முருகன் ஆலயங்களில் ஒன்றான தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம்
கடந்த 11.07.2015 சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.அந்த
வகையில் நேற்று (22.07.2015) புதன்கிழமை திருவிழாவினை குருக்கள்மடம், செட்டிபாளையம், மாங்காடு, தேற்றாத்தீவு,களுதாவளை
மற்றும் களுவாஞ்சிகுடி ஆகிய ஆறு கிராம மக்கள் ஒன்று இணைந்து திருவிழாவினை நடாத்தினர்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் புகழ் பெற்ற கலைகழகங்களில் ஒன்றான தேனுகா கலைகழகத்தின் பக்தி முத்தமிழ் கலை நிகழ்சியும்,தேற்றாத்தீவு இந்து இளைஞ்ஞர் மன்றத்தின் பஜனை நிகழ்வும் இடம் பெற்றது.அதனை தொடர்து கொடிமரப்பூஜை,வசந்த மண்ட பூஜை, சுவாமி உள்வீதி வெளிவீதி வருகையும் இடம் பெற்றது
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் புகழ் பெற்ற கலைகழகங்களில் ஒன்றான தேனுகா கலைகழகத்தின் பக்தி முத்தமிழ் கலை நிகழ்சியும்,தேற்றாத்தீவு இந்து இளைஞ்ஞர் மன்றத்தின் பஜனை நிகழ்வும் இடம் பெற்றது.அதனை தொடர்து கொடிமரப்பூஜை,வசந்த மண்ட பூஜை, சுவாமி உள்வீதி வெளிவீதி வருகையும் இடம் பெற்றது