(நித்தி)
தம்பன் கடவை மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி ஆலய வருடாந்த திவ்விய மகோற்சவ பெருவிழா ஆடி அமாவாசை திவ்விய மகோற்சவ பெருவிழா மங்களகரமான மன்மத வருட் தஷினாயன காலம் கிரிஷ்மருது முதுவெனிற் காலம் ஆடி மாதம் 20ம் நாள் (05.08.2015) புதன்கிழமையும்ஷஷ்டித் திதியும் ரேவதி நட்சத்திரமும் கூடிய சுபவேளையில் மகோற்சவ பிரதம குரு தேவி உபாசகர் ஆகம கிரியா ரத்னா பிரதிஸ்டா சாகரம் சிவஸ்ரீ சபா பாஸ்கரக்குருக்கள் (பிரதம குருவும் ஆதீன கார்த்தாவும் மஹாமாரி அம்பாள் ஆலயம் தம்பசிட்டி, பருத்தித்துறை) அவர்களினால் முற்பகல் 11.15 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
ஆலயத்தின் கொடிச் சிலையானது பழைய ஊர் மன்னம்பிட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து வாலித்தம்பி வட்டவிதானை குடும்பத்தினர் மூலமாக ஊர்வலமாக ஆலயத்திற்கு எடுத்துவரப்பட்டதும் விசேட பூசைகளுடன் கொடியேற்றம் இடம்பெற்றது.
சிவபூமி, புண்ணியபூமி, சுவர்ணபூமி என்று திருமூலரால் போற்றப்படும் இலங்காபுரியில் வடமத்திய மாகாணத்தில் பொலநஞவை மாவட்டத்தில் அருள் வளமும் திருவருளும் இயற்கை எழில் கொஞ்சும் மருத மரங்களும் மயில்களின் நடனங்களும் பறவைகளின் ஓசைகளும் ஆபி இனங்கள் செறிந்து வாழும் தம்பன் கடவை மண்ணப்பிட்டி பதியில் மகாவலி கங்கை கரைதனில் பெருங்கோயில் கொண்டு வீற்றிந்து தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள்மழை பொழியும் கட்டைபறிச்சான் வேல்தனின் வேல்தனின் வருடாந்த ஆடி அமாவாசை திவ்விய மகோற்சவ பெருவிழாவனது கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 தினங்களும் காலை இரவு மகோற்சவ விழா நிகழ்வுற்று 10ம் நாளாகிய ஆடி அமாவாசை வெள்ளிக்கிழமை (14) நன் நாளில் மகாவலி கங்கையில் தீர்த்தோற்சம் நடைபெறவுள்ளது.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் பெருவிழாவின் ஏழாம் நாளாகிய இன்று (11) செவ்வாக்கிழமை ஆலயத்தின் நிருவாகசபையினரால் மிகவும் சிறப்பான முறையில் பகல் மற்றும் இரவுவேளை விசேட பூசைகள் நடைபெறவுள்ளது.
வரலாற்று புகழ்பெற்ற மன்னம்பிட்டி சித்திர வேலாயுதர் சுவாமி ஆலய மகோற்சவ பெருவிழாவின் போது இனமத பேதமின்றி அடியார்கள் ஆலயத்திற்கு வருகைதந்து எம்பெருமான் முருகப்பெருமானை தரிசித்துசெல்கின்றதுடன் நடைபெறும் பூசைகளிலும் பெருந்திரளான பக்தர்கள் நாளாந்தம்; கலந்துகொண்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக