மட்டக்களப்பு மாவட்டம் பாசிக்குடா கடலில் குளித்துக் கொண்டிருந்த பிரெஞ்சு நாட்டு பெண் சுற்றுலா பயணிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதான இராணுவ வீரரொருவர் வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பெண் சுற்றுலாப் பயணி செய்த முறைப்பாட்டின் பேரில் புணாணை இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரரான ராஜமந்த்ரிலாகே சஞ்ஜீவபுஸ்பகுமார என்பவரை செவ்வாயன்று கல்குடா பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இவர் கைது செய்யப்படும்போது சிவில் உடையில் இருந்ததாகக் கூறப்படுகின்றது.
கடந்த 5 நாட்களாக பாசிக்குடாவிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் பிரெஞ்சு பிரஜை கடலில் குளிக்கும் வேளைகளில் இந்நபரும் குளித்தவாறு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகின்றது.
புதன்கிழமை வாகரை சுற்றுலா நீமதிமன்றத்தில் சந்தேக நபரான இராணுவ வீரர் பொலிஸாரால் முன்னிலைப் படுத்தப்பட்ட போது வெள்ளிக்கிழமை வரை விளக்கமறிலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

0 facebook-blogger:
கருத்துரையிடுக