ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

மட்டக்களப்பு மாவட்டத்தின் சுற்றுலாதுறை மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்கள் ஆரம்பம்

சுற்றுலாத்துறையினை மேம்படுத்தவும் உல்லாசப்பிரயாணிகளை கவரும் நோக்காகக்கொண்டு மட்டக்களப்பு மாநகரசபையினால் பல்வேறு திட்டங்கள் மட்டக்களப்பு நகரில் நேற்று ஆரம்பித்துவைக்கப்பட்டன.


ஆசியா பவுண்டேசன் மற்றும் கொய்க்கா ஆகியவற்றின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு மாநகரசபையினால் இந்த திட்டங்கள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட்; பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக கொய்க்காகவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி டினோசா டி சில்வா விக்ரமநாயக்க,கொய்க்காவின் வதிவிட பிரதிநிதி கன்ஜென் ஜின்,முதலமைச்சரின் செயலாளர் அசீஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வரும் வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலாப்பிரயாணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா இடங்களை அறியும் வகையிலும் அவர்கள் அவற்றினை பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளை வழங்கும் வகையிலும் திருநீற்றுக்கேணி பூங்கா அருகில் இந்த சுற்றுலா மையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து உல்லாசப்பிரயாணிகளின் நன்மை கருதி நகரினுல் புகைவண்டி சேவை,திறந்தவெளி உடற்பயிற்சி நிலையம்,துவிச்சக்கர வண்டி பயணம் மேற்கொள்பவர்களுக்கான நிலையம் என்பன திறந்துவைக்கப்பட்டது.

அத்துடன் மட்டக்களப்பில் உள்ள புகைப்படக்கலைஞர்களின் கைவண்ணங்களில் உருவான புகைப்படக்கண்காட்சியும் இதன்போது திறந்துவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு அண்மைக்காலமாக சுற்றுலாப்பிரயாணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில் அவர்களை கவரும் வகையிலான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின்போது பாரம்பரிய கலை நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் சுற்றுலா மையங்கள் மற்றும் சுற்றுலாதுறை தொடர்பான பல்வேறு விடயங்கள் தாங்கிய கிழக்கு மாகாணத்தின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய கையேடுகளும் இங்கு வெளியிட்டுவைக்கப்பட்டன.




























Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624982

Translate