புதன், 19 ஆகஸ்ட், 2015

பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்த பட்டிருப்பு தொகுதி –தேசிய பட்டியல் மூலம் நிரப்பப்படுமா?

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் முதல்முறையாக பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டுள்ளது.


நடந்துமுடிந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தனித்தமிழ் தொகுதியாக கருதப்படும் பட்டிருப்பில் இருந்து எந்த வேட்பாளரும் தெரிவுசெய்யப்படாதது தொடர்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரணாக கருதப்படும் பட்டிருப்பு தொகுதியானது எக்காலத்திலும் ஒரு பிரதிநிதி அல்லது இருவரை பெற்றே வந்தது.

ஆனால் இம்முறை நடைபெற்ற பொதுத்தேர்தலில் எந்தக்கட்சியிலும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பெற்றுக்கொள்ளமுடியாத நிலையில் உள்ளது.

பட்டிருப்பு தொகுதில் முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா,பா.அரியநேத்திரன்,கோவிந்தன் கருணாகரம் ஆகியோரும் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் முன்னாள் பிரதியமைச்சர் சோ.கணேசமூர்த்தியும் போட்டியிட்ட போதிலும் அனைவரும் தோல்வியை தழுவியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒரு துர்ஸ்டவசமான நிகழ்வு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டிலிலாவது ஒரு பிரதிநிதியை வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

வடகிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வளர்ச்சிக்கு பட்டிருப்பு தொகுதியின் பங்கு மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624979

Translate