திங்கள், 31 ஆகஸ்ட், 2015

சட்ட விரோத சாராயம் விற்ற பெண் கைது

சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்து சாராயம் விற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குடும்பப் பெண்ணொருவரைத் தாம் கைது செய்திருப்பதாக அம்பாறை- கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

180 மில்லி லீற்றர் அரச வடிசாராயத்தைச் சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்து விற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேற்படி அளவுடைய சாராயத்துடன் இப்பெண் ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீண்ட காலமாக இப்பெண் இத்தகைய சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டுவருவதாக பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் புலானாய்வு செய்த இப்பெண்ணைக் கைது செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.



இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624983

Translate